Saturday, March 27, 2010

தமிழ்

எனது அன்னைத் தமிழை இவ்வலைப்பதிவில் பாா்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! இனி தொடா்ந்து இவ்வலைப் பதிவில் எனது கருத்துக்களை பதிவு செய்ய முடிவு செய்து உள்ளேன்.!

3 comments:

  1. ஆவலுடன் தமிழில் பதிய ஆரம்பித்த தகவலைத் தெரிவித்ததுடன் நிறுத்தி விட்டிர்களே. தொடருங்கள் உங்கள் தமிழ் பதிவுப் பணியை.

    ReplyDelete
  2. நண்பர் தவப்புதல்வன்
    அவர்களே தாங்கள் கேட்டுக் கொண்டவாறு எனது வாழ்க்கை வரலாற்று பதிவை இன்று பதிகிறேன்.

    ReplyDelete
  3. 20/04/1951 அன்று கோவையில் பாலகிருஷ்ணன் என பெயரிடப்பட்ட நான் பிறந்தேன். தந்தை திரு.சுவாமியப்பன். தாயார் திருமதி.அன்னபூரணி. எங்கள் பெற்றோருக்கு நாங்கள் ஐந்து குழந்தைகள். மூத்தவர் திருமதி.கோமதி
    அடுத்தது நான், எனக்குப் பிறகு தம்பி சோமசுந்தரம், தங்கை காந்திமதி, கடைக்குட்டி மோகன்குமார்.

    பால பருவம் :
    நினைவுக்கு வந்த முதல் நிகழ்ச்சி. எங்கள் எல்லோருக்கும் மூத்த அண்ணன் இறந்தபோது (நான் குண்டாக உடல் வாகு கொண்டவனாக இருந்ததால்) எனது சிறிய தந்தை என்னை அண்டாவில் நிற்க வைத்து 'குண்டா, குண்டா, குண்டா - அண்டா சோத்தை தின்ன குண்டா, குண்டா, குண்டா என்று பாடி கிண்டல் செய்தது. பின்னர் கோவை - உக்கடம் - கோட்டைமேடு பகுதியில் உள்ள நகராட்சித் துவக்கப் பள்ளியில் எனது கல்வி கற்றல் துவங்கியது. அழகிய செடி, கொடிகள் சூழ்ந்த இயற்கையான சூழல். மழைக் காலங்களில் தோட்டத்திற்குச் செல்லும் வாய்க்காலில் காகிதக் கப்பல் செய்து விட்டு அதன் பின்னே ஓடிச் சென்று ரசித்தது ஞாபகம் இருக்கிறது. கணக்குப் பரீட்சை எழுதும் சமயத்தில் விடை தெரியாமல் முழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்போது ஆசிரியர் எனது காதருகே வந்து 'எட்டுக்
    கட்டுகள்' என்ற விடையை சொல்லிச் சென்றது இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் குடியிருந்த வீட்டினருகே இருந்த பள்ளி மாணவன் ராதாகிருஷ்ணன் திடீரென இறந்தது அதிர்ச்சியாக இருந்தது.

    பின்னும் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete